விழுப்புரம், திண்டிவனத்தில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு

விழுப்புரம், திண்டிவனத்தில் புதிய நீதிமன்றங்களை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

விழுப்புரம், திண்டிவனத்தில் புதிய நீதிமன்றங்களை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக போதை மருந்துகள், உளச்சார்பு பொருள்கள் சட்ட வழக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ செவ்வாய்க்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார். மேலும், அடிக்கல்லையும் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட முதன்மை  நீதிபதி சரோஜினிதேவி, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதியாக ஜமுனா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு வழக்குகள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
திண்டிவனத்தில்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாயத்தையும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ திறந்துவைத்தார். பின்னர், திண்டிவனத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நீதிமன்ற திறப்பு விழா நிகழ்ச்சியிலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com