இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் இளைஞர் அமைப்பினர் இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் இளைஞர் அமைப்பினர் இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசு, விழுப்புரம் மாவட்டம், நேரு இளையோர் மைய அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் சிறப்பாக சேவை புரிந்துவரும் இளைஞர் அமைப்பை தேர்வு செய்து மாவட்ட அளவிலான இளைஞர் மன்ற விருது வழங்கி வருகிறது. இளைஞர், மகளிர் அமைப்புகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தின் மூலமாக சிறந்த மன்றமாக தேர்வு செய்யப்படும் அமைப்புக்கு ரூ.25,000 ரொக்கமும், நற்சான்றிதழும் வழங்கப்படும்.
 விழுப்புரம் மாவட்டத்தில் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, நேரு இளையோர் மையத்துடன் இணைக்கப்பெற்று செயல்படும் இளைஞர், மகளிர் மன்றங்களிடமிருந்து இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த 1.4.2017 முதல் 31.3.2018 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மட்டுமே இந்த விருதுக்கு பரிசீலிக்கப்படும்.
 மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நேரு இளையோர் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், அங்கேயே விண்ணப்பத்தையும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தக்க சான்றுகளுடன் நவ. 30-க்குள் நேரு இளையோர் மைய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நேரு இளையோர் மைய மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com