விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஆகியப் பகுதிகளுக்கு உள்பட்ட தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக அரசின் விருதுபெற்ற சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஆகியப் பகுதிகளுக்கு உள்பட்ட தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக அரசின் விருதுபெற்ற சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
 சங்கராபுரம் ஆமினா கல்வி அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் தலைமை வகித்தார். கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் செ.வ.மதிவாணன், திருக்கோவலூர் தமிழ்ச் சங்கச் செயலர் பாரதிமணாளன், தென்பெண்ணைத் தமிழ்ச் சங்க துணைச் செயலர் தே.அய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் சி.இளையாப்பிள்ளை வரவேற்றார். ஓய்வுபெற்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சு.கோபால் தொடக்கவுரை ஆற்றினார். கவிஞர் இரா.கதிர்வேல் குறள் விளக்கம் அளித்தார். தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
 விழாவில் தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருதுபெற்ற திருக்கோவிலூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியனுக்கு, வள்ளலார் மன்ற செயலர் இரா.நாராயணனும், திருக்குறளை முழுமையாக ஒப்பித்து தமிழக அரசின் விருதுபெற்ற மாணவி சு.சுஷ்மாவுக்கு, வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பனும், மாணவி சு.சுசாந்திகாவுக்கு, மூவேந்தர் முத்தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் தி.ம.சுப்பிரமணியனும், பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்று தனியார் நிறுவனம் சார்பில் விருதுபெற்ற மாணவி அ.ஹர்ஷா சாம்லாவுக்கு, ஓவியர் மு.கலைச்செழியனும் நினைவுப் பரிசு வழங்கினர்.
 சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன், கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.வ.புகழேந்தி, கள்ளக்குறிச்சி சமூக சிந்தனையாளர் தமிழ்க் கழகத் தலைவர் கலிய.செல்லமுத்து, அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன், கற்க கசடற கலை இலக்கியக் கழகத் தலைவர் தேவதிருவருள், ஜெய் பிரதர்ஸ் கபாடிக் குழுத் தலைவர் வ.விஜயகுமார் ஆகியோர் சாதனையாளர்களைப் பாராட்டிப் பேசினர். ஆசிரியர் சி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com