விக்கிரவாண்டியில் 21 கண்காணிப்பு கேமராக்கள்: எஸ்.பி. தொடக்கி வைத்தார்

விக்கிரவாண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட 21 கண்காணிப்புக் கேமராக்களின் சேவையை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

விக்கிரவாண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட 21 கண்காணிப்புக் கேமராக்களின் சேவையை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
 விக்கிரவாண்டிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதுடன், நகரம் தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
 இந்தப் பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் முதல் கட்டமாக பனையபுரத்தில் 4 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன்பிறகு, விக்கிரவாண்டி பகுதியில் உள்ள 4 அம்பேத்கர் சிலைகளுக்கு 8 கேமராக்கள் பொருத்தப்பட்டன.
 தற்போது, தனியார் பங்களிப்புடன் ரூ.4 லட்சம் செலவில் நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள், புறவழிச் சாலை உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 21 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான கட்டுப்பாடு அறை விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வியாழக்கிழமை மாலை தொடக்கிவைத்தார்.
 நிகழ்ச்சியில் விழுப்புரம் டிஎஸ்பி சங்கர், காவல் ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் பாலமுருகன், நெல் ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பஷீர் அகமது, அப்துல் சலாம், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் ராஜபாண்டியன், சம்பத், பாமக மாநில துணைத் தலைவர் ஹரிகரன், திமுக விவசாய அணி பாபுஜீவானந்தம், திமுக நகரத் தலைவர் நைனார் முகமது, அதிமுக நகரத் தலைவர் பூர்ணராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com