பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்

திருக்கோவிலூர் அருகே எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிப் பரிமாற்ற திட்ட நான்காம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. 

திருக்கோவிலூர் அருகே எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிப் பரிமாற்ற திட்ட நான்காம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. 
கிராமப்புற - நகர்ப்புற மாணவ, மாணவிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும், கற்றல் வழிமுறைகளை அறிந்து கொள்ளவும் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 
இத்திட்டத்தின் கீழ் எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, விழுப்புரம் காமராஜர் நடுநிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் அம்மையப்பன் தலைமையில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் கடந்த திங்கள்கிழமை வந்தனர். 
எடையூர் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ரவி தலைமை வகித்து வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
வியாழக்கிழமை நடைபெற்ற நான்காம் கட்ட பயிற்சி முகாமில், மாணவர்கள் துணி, காதிதம், அட்டை மற்றும் பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியப்படும் பொருள்களைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருள்களை செய்து காண்பித்தனர். 
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று நாடகத்தையும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிப்பது குறித்து மாதிரி கண்காட்சியையும் மாணவர்கள் அமைத்திருந்தனர். 
சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உபகரணங்களைக் கொண்டும், காணொலிக் காட்சி மூலமாகவும் பள்ளி ஆசிரியை உஷா புதிய உத்திகளைக் கையாண்டு, எளிதில் விளங்கும் வகையில் பாடங்களை நடத்தினார்.  திருக்கோவிலூர் கிளை நூலகர்கள் மு.அன்பழகன், மு.சாந்தி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் வாசிப்பின் அவசியத்தை விளக்கிப் பேசினர். 
 வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சந்தியாகு சிங்கராயன், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜி.ராஜ்குமார், வி.மணிகண்டன், ஜெ.சம்பத் ஆகியோர் மாணவர்களின் கற்றல் திறனைப் பாராட்டிப் பேசினர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.வீரப்பன், மேலாண்மைக் குழுத் தலைவர் கே.சண்முகப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com