காணும் பொங்கல் கொண்டாட்டம்: காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது விதி மீறுவோர் மீது

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது விதி மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.   இவ்விழாவை எவ்வித அசம்பாவித சம்பவங்களும்,  குற்றச்செயல்களும் நடைபெறாமல் மக்கள் கொண்டாடுவதற்காக,  காவல் துறை சார்பில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
காவல் கண்காணிப்பாளர் தலைமையில்,  ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,  14 துணைக் கண்காணப்பாளர்கள், 40 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட 2,500 போலீஸார்,  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிவேகமாகவும்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்,  இரு சக்கர வாகனங்களில்  மூன்று பேரை ஏற்றிச் செல்வோர்  மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்யவும்,  குற்ற வழக்குகள் பதிவு செய்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், கடை வீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை ஆகிய இடங்களில் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு,  அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
மரக்காணம்,  கோட்டக்குப்பம்,  ஆரோவில் பகுதிகளில் உள்ள கடலில் ஆபத்து நிலை கருதி பொதுமக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com