நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

திருக்கோவிலூர் அருகே 4 ஆண்டுகளாய் காட்சிப் பொருளாகக் காணப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்துவைக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் அருகே 4 ஆண்டுகளாய் காட்சிப் பொருளாகக் காணப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்துவைக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூர் கிராமத்தில் உள்ள முருகன் கோயில் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் அடிப்படை தேவையைக் கருத்தில் கொண்டு, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மூலம் தாய்த் திட்டத்தின் கீழ், ரூ. 3.20 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கிய நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணி, 2015-ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. எனினும், கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல், காட்சிப் பொருளாகவே இருந்தது.
இதனிடையே, அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். 
 இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த 6-ஆம் தேதி  செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கடந்த சில நாள்களாக நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்குரிய குழாய்கள் புதைக்கும் பணி, வீதிகளில் பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்கான பொதுக் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com