என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வரன் உள்ளூரில் அமையுமா? மண வாழ்க்கை, வேலை, ஆயுள், எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகர், திருவண்ணாமலை

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. செவ்வாய்தோஷம் இல்லை. தற்சமயம் சுக்கிர மகாதசை முடியும் தறுவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com