ஜோதிட கேள்வி - பதில்கள்

எனது பேத்திக்கு வயது 29 ஆகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? அரசு அல்லது தனியார் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா?
 - வாசகர், திருவண்ணாமலை

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் கேதுபகவான்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்

13-09-2019

எனது மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? இரும்பு சம்பந்தமான தொழில் செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறான். தொழிலில் முன்னேற்றம் உண்டா? லாபகரமாக அமையுமா?
 - வாசகர், உள்ளகரம்

உங்கள் மகனுக்கு துலா லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று நீச்சம் பெற்றுள்ள சூரியபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார்.

13-09-2019

எனக்கு இரைப்பையில் கேன்சர் உள்ளது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். எனது ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? எனக்கு குழந்தைகள் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?
 - வாசகி, சென்னை

உங்களுக்கு மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார்.

13-09-2019

என் சகோதரியின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் எப்போது வரும்? நல்ல திருப்பம் எப்போது வரும்?
 - வாசகி, அனகாபுத்தூர்

உங்கள் சகோதரிக்கு மேஷ லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று புதபகவானுடன் இணைந்து கடக ராசியில் உச்சம் பெற்றுள்ள

13-09-2019

என் மகளுக்கு திருமணமாகி மூன்றாண்டாகியும் இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. மிகவும் மன உளைச்சலாக உள்ளது. எப்போது புத்திர பாக்கியம் கிடைக்கும்? இதன் நிமித்தமாக சந்தான கோபால விரதம் போன்ற பரிகாரங்கள் செய்வது அவசியமா?
 - வாசகர், மயிலாடுதுறை

உங்கள் மகளுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. புத்திரகாரகர் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பம்

13-09-2019

என் மகளுக்கு வரன் இன்னும் சரியாக அமையவில்லை. எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் வரன் அமையும்? அரசு உத்தியோகம் கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - வாசகர், மதுரை

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் கேதுபகவான்கள் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதியான

13-09-2019

என் அண்ணனுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண் பார்த்து வருகிறோம். சொந்தமாக தொழில் செய்து வருவதைக் காரணம் கூறி தவிர்க்கிறார்கள். திருமணத்தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - வாசகி, ஆதம்பாக்கம்

உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். சர்ப்ப தோஷம் உள்ளது. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம்

13-09-2019

மென்பொறியாளராக பணியாற்றும் என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு ஏற்படுமா? சொந்தமாக வீடு எப்போது அமையும்?
 - வாசகர், பண்ருட்டி

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் லக்ன சுபர்கள் இணைந்திருக்கிறார்கள்.

13-09-2019

எனது மகனுக்கு எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்?
 - வாசகர், மயிலாடுதுறை

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம், லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்திலும் குடும்பாதிபதி சுக ஸ்தானத்திலும், பாக்கியாதிபதி லாப ஸ்தானத்திலும்

13-09-2019

என் மகன் தற்போது அரசுப் பணிக்கு உறுதியாக முயற்சி செய்கிறார். இன்னும் எந்த வேலையும் அமையவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது செய்யலாம்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
 - வாசகர், ராமநாதபுரம்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதிகள் களத்திர, நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

13-09-2019

நான் இளநிலை மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) முடித்துள்ளேன். முதுநிலை படிக்கும் வாய்ப்பு உண்டா? ஒன்பதில் ராகு உள்ளதால் புத்திரபாக்கியம் கடினம் என்கிறார்கள். இதற்கு தீர்வு உண்டா?
 - வாசகி, திருச்சி

உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் சச மகா யோகம் உண்டாகிறது

13-09-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை