எங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் பேச்சியம்மனையும், வீரபத்திரரையும் வழிபட்டு வருகிறோம். இது சரியா? குழந்தை பாக்கியம் எப்பொழுது கிட்டும்?
வாசகி, வளசரவாக்கம்.
உங்களுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதி செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில், பாக்கியாதிபதியான குரு (குரு மங்கள யோகம்) பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை தன் மூலத்திரிகோண வீடான பாக்கிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டின் மீதும் படிகிறது.
களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரிய பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுகாதிபதி, தைரியம், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானாதிபதி மற்றும் தொழில் லாபாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார்.
ராகு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும். தற்சமயம் லக்னாதிபதியான செவ்வாய் பகவானின் தசையில் வர்கோத்தமம் பெற்ற புத பகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே மழலை பாக்கியம் உண்டாகும். உங்கள் குலதெய்வத்தை பேச்சியம்மன், வீரபத்திரர் என்று கொண்டே வழிபட்டு வரவும். மற்றபடி பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.