அரசுப் பணியில் உள்ள எனக்கு,  இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தாயை இழந்துவிட்டேன். தந்தை நலமுடன் உள்ளார். மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லவும்?

Updated on
1 min read

அரசுப் பணியில் உள்ள எனக்கு,  இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தாயை இழந்துவிட்டேன். தந்தை நலமுடன் உள்ளார். மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லவும்?

-வாசகர், அரியலூர்.

உங்களுக்கு கடக லக்னம், ரிஷப ராசி,  ரோகிணி நட்சத்திரம், லக்னாதிபதி உச்சம் பெற்று, ஆறு , பாக்கியாதிபதியான குரு (குரு சந்திர யோகம்) பகவானுடன்இணைந்து இருப்பது சிறப்பு. 
குரு பகவானின் ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும்,  ஐந்தாம் பார்வை தைரிய முயற்சி ஸ்தானத்தின் மீதும் படிகிறது. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டுக்கும், அஷ்டம ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டுக்குமதிபதியமான சனி பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று, அயன ஸ்தானத்தில் உள்ள சுக்கிர பகவானால் பார்க்கப்படுகிறார். 
பூர்வ புண்ணியாதிபதி, தொழில் ஸ்தானதிபதி செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.  தற்சமயம் குரு மஹா தசையில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலுள்ள கேது பகவானுடன் இணைந்துள்ள புத பகவானின் புக்தி நடக்கிறது. தசாநாதனும், புத்திநாதனும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றிருக்கிறார்கள். அதனால் உங்கள் வாழ்வில் படிப்படியான வளர்ச்சி உண்டாகத் தொடங்கும்.  உங்கள் அன்னையின்ஆசிகளும் கிடைக்கும். அவரின் இறந்த திதியன்று தவறாமல் திவசம் செய்துவரவும். பிரதி வியாழக்கிழமை குரு பகவான் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com