என் வயது 52. +2 படிப்பு. எனக்கு அதிகம் படித்த பெண்ணை நான் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த பின்னர் ஒன்று சேர்ந்து வாழவில்லை. கோர்ட் மூலமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கிடைத்தது. அதன்பின்னர் மறுமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தொழில் சரியாக நடைபெறவில்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன். இரண்டாவது மனைவியும் எள்ளிநகையாடுகிறார். விவசாயம் செய்யலாமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், ஸ்ரீவில்லிபுத்தூர்

உங்களுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் சந்திர, சூரிய, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார்

உங்களுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் சந்திர, சூரிய, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இருப்பதும் தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதும் சிறப்பு. தற்சமயம் பலம் பெற்றுள்ள ராகுபகவானின் தசை நடப்பதால் விவசாயத்தில் முழுமையாக ஈடுபடலாம். விவசாயம் சம்பந்தப்பட்ட உப தொழில்களையும் செய்யலாம். மற்றபடி எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com