சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத்.
விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிராக் லிஸ்ட் எனப்படும் பாடல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.