டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள இரு பெரிய படங்கள்!

டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள படங்களுக்கு 5 நாள்களுக்கு நல்ல வசூல் கிடைக்க வாய்ப்புண்டு...
டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள இரு பெரிய படங்கள்!

டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள படங்களுக்கு 5 நாள்களுக்கு நல்ல வசூல் கிடைக்க வாய்ப்புண்டு. இதையடுத்து அன்றைய தினம் நான்கு படங்கள் வெளிவரவுள்ளன. 

சீதக்காதி, சர்வம் தாள மயம், பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம் என நான்கு படங்கள் வெளிவரும் நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்துக்கும் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள சர்வம் தாள மயம் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. இசை - கோவிந்த் வசந்தா. விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா, செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து சீதக்காதி படம் வெளிவரத் தயாராக உள்ளது.

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com