நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்

நயன்தாராவின் பிறந்தநாளுக்கு தான் கொடுத்த சர்பிரைஸை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்

நயன்தாராவின் பிறந்தநாளுக்கு தான் கொடுத்த சர்பிரைஸை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் முன்னணி நடிகையான நயன்தாரா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 34-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், நயன்தாராவுக்கு மிகவும் நெருக்கமான இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது பிறந்தநாளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளார். 

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் பலூன்கள், எண்ணற்ற மின் விளக்குகள் என வீட்டையே அழகுபடுத்தியுள்ளார். மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று புகைப்படத்துடன் கூடிய கேக்கையும் தயார் செய்து இருக்கிறார்.

இதையடுத்து, அந்த கேக் முன்னர் நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'எனது தங்கத்துக்கு மிகச் சிறிய ஒரு இன்ப அதிர்ச்சி' என்று பதிவிட்டுள்ளார்.   

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com