'மெர்சலாக்கும் விஜய்'- சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு!

2018-ம் ஆண்டுக்கான சர்வதேச சாதனைக்கான அங்கீகார விருதுகள் (ஐஏஆர்ஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. 
'மெர்சலாக்கும் விஜய்'- சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தார். சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

முதன் முறையாக 3 கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் நடித்துள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2018-ம் ஆண்டுக்கான லண்டனைச் சேர்ந்த சர்வதேச சாதனைக்கான அங்கீகார விருதுகள் (ஐஏஆர்ஏ) விருதுப் பட்டியல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

2014 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தச் சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியல்களில், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றார். 

இந்நிலையில், சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்கிற சர்வதேச விருதை மெர்சல் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்றார்.

ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த சர்வதேச விருது தமிழ் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com