ரஜினியா? அஜித்தா?: வசூலில் முந்துபவர் யார்?

பொங்கல் சமயத்தில் வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களில் எது வசூலில் முன்னணியில் உள்ளது...
ரஜினியா? அஜித்தா?: வசூலில் முந்துபவர் யார்?

பொங்கல் சமயத்தில் வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களில் எது வசூலில் முன்னணியில் உள்ளது?

இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை தெரியாததால்தான் இன்றுவரை இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல்கள் சமூகவலைத்தளங்களில் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த மோதலில் தற்போது இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்துள்ளன. 

சில நாள்களுக்கு முன்பு, எங்களுக்கே பட வசூல் தெளிவாகத் தெரியாத நிலையில் பட வசூல்களைத் தவறாக வெளியிடவேண்டாம் என்று ட்வீட் வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்நிலையில் பேட்ட படத்தின் வசூல் விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கு அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு பேட்டியில், இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடியை எட்டும். தமிழ்ப் படங்களில் இது ஓர் சாதனை என்று கூறியுள்ள விடியோவையும் சர்வதேச விநியோகஸ்தர் மாலிக் ஸ்ட்ரீம்ஸ், பேட்ட படம் இதுவரை இந்தியா தவிர உலகின் பிறகு பகுதிகளில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறியுள்ள விடியோவையும் பகிர்ந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதன்மூலம் இதுவரை உலகளவில் ரூ. 150 கோடியை பேட்ட படம் வசூலித்துள்ளதாக அறியப்படுகிறது. 

இதையடுத்து விஸ்வாசம் படத்தை வெளியிட்டுள்ள கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், விஸ்வாசம் படம் இதுவரை ரூ. 125 கோடியை வசூலித்துள்ளது எனத் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மறைமுகமாக பேட்ட படத்தை விடவும் விஸ்வாசம் அதிகம் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதனால் எந்தத் தகவல் உண்மையானது என்கிற பரபரப்பு சமூகவலைத்தளங்களில் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டு அளவில் விஸ்வாசம் படம் அதிகத் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலை அள்ளினாலும் உலகளவில் பேட்ட படமே அதிக வசூலை அடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com