சென்னைப் புத்தகக்காட்சியில் பினாக்கிள் புக்ஸ் அரங்கு எண் 10! வாருங்கள்.. புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள்!!

2019, ஜனவரி மாதம் நடைபெற உள்ள 42-வது சென்னை புத்தகக் காட்சியில் நமது பினாக்கிள் புக்ஸ் பதிப்பகத்துக்கு 10-ம் எண் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னைப் புத்தகக்காட்சியில் பினாக்கிள் புக்ஸ் அரங்கு எண் 10! வாருங்கள்.. புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள்!!

2019, ஜனவரி மாதம் நடைபெற உள்ள 42-வது சென்னை புத்தகக் காட்சியில் நமது பினாக்கிள் புக்ஸ் பதிப்பகத்துக்கு 10-ம் எண் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 4 முதல் 20-ம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. மொத்தம் 804 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 416 பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் புத்தகங்களை விற்பனை செய்ய உள்ளனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் முதன் முறையாக சென்னைப் புத்தகக்காட்சியில் கலந்து கொள்ள உள்ளது.

பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் சார்பில் இதுவரை 10 புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

டி.ஜே.எஸ். ஜார்ஜ் தொகுத்த ஜெயா (112 பக்கம், ரூ.499), தி கோயங்கா லெட்டர்ஸ் (260 பக்கம், ரூ.299), டி.வி. நாராயண சுவாமி எழுதிய ராமாயணா (574 பக்கம், ரூ.650) என மூன்று ஆங்கிலப் புத்தகங்களும், ஹாலாஸ்யன் எழுதிய ஆச்சரியமூட்டும் அறிவியல் (144 பக்கம், ரூ.135), நாகூர் ரூமி எழுதிய  நலம் நலமறிய ஆவல் (448 பக்கம், ரூ.420), தினமணி ஆசிரியர் கே.  வைத்தியநாதன் தொகுத்த அம்மா (152 பக்கம், ரூ.120), சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி (144 பக்கம், ரூ.150), பா. ராகவன் எழுதிய நாவல் யதி (928 பக்கம், ரூ.1000), என்.எஸ். நாராயணசாமி எழுதிய பலன் தரும் பரிகாரத் தலங்கள் - 54 (256 பக்கம், ரூ.200), நலம் தரும் பரிகாரத் தலங்கள் - 54 (264 பக்கம், ரூ.200) ஆகிய தமிழ்ப் புத்தகங்கள் புத்தகக்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கும். எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

பினாக்கிள் புக்ஸ் பதிப்பகத்தின் அரங்கு தவிர, தினமணி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்அரங்கிலும் பினாக்கிள் புக்ஸ் பதிப்பக வெளியீடுகள் விற்பனைக்குக் கிடைக்கும்.

வாசகர்கள் தவறாமல் புத்தகக்காட்சிக்கு வந்து பினாக்கிள் புக்ஸ் வெளியீடுகளை வாங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு

பா. ராகவன் எழுதிய யதி மற்றும் சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி என்ற இரு புத்தகங்களையும் www.pinnaclebooks.in என்ற இணையதளத்திலும், வங்கி மூலம் நேரடி பணம் செலுத்தும் வசதி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிசம்பர் 30-ம் தேதி வரை இவ்விரு புத்தகங்களையும் முன்பதிவு செய்யலாம்.

ரூ.1000 மதிப்புள்ள யதி புத்தகம் ரூ.700-க்கும், ரூ.150 மதிப்புள்ள நேரா யோசி புத்தகம் ரூ.101-க்கும் முன்பதிவு செய்யப்படுகிறது.

பினாக்கிள் புக்ஸ் இணையதளம் மூலமாகவும், வங்கியில் நேரடியாகப் பணம் செலுத்தியதன் மூலமாகவும் யதி மற்றும் நேரா யோசி புத்தகங்களை முன்பதிவு செய்தவர்களுக்கு சென்னைப் புத்தகக் காட்சியில் பினாக்கிள் புக்ஸ் அரங்கில் புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகக் காட்சிக்கு வரும்போது பணம் செலுத்தியதற்கான அத்தாட்சியோடு வருபவர்களுக்கு மட்டுமே புத்தகம் வழங்கப்படும்.

கூடுதல் தள்ளுபடி

எங்களது பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ள 10 புத்தகங்களையும் மொத்தமாக வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.

ஆங்கிலப் புத்தகங்கள் மூன்றையும் வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், ஏழு தமிழ்ப் புத்தகங்களையும் மொத்தமாக வாங்குபவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com