கோடை காலத்தில் உடல் சூடு தணிய இதைச் சாப்பிடலாம்!

கேரட் மனிதர்களுக்கு பல்வேறு வகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது.
கோடை காலத்தில் உடல் சூடு தணிய இதைச் சாப்பிடலாம்!

கேரட் மனிதர்களுக்கு பல்வேறு வகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக தற்போதைய கோடை காலத்தில் உடல் சூடு தணிய அதிக அளவில் கேரட் ஜுஸ் பருகலாம். இதன் பிற பயன்களை பார்ப்போம்:

  • கேரட் சாற்றினை வாரம் மூன்று முறை வீதம் இரண்டு மாதங்களுக்கு அருந்தி வந்தால் அல்சர் போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் மறுபடியும் அது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • விட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் கண்களில் புரை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்து உள்ளதால் மாலைக்கண் நோய் வராமல் காப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்து புற்றுநோய் ஏற்படாமல் காப்பதில் கேரட் பெரும் பங்கு வகிக்கிறது.
  • கேரட்டை துருவி பசும்பாலுடன் சேர்த்து காய்ச்சி காய்ந்த திராட்சை மற்றும் தேன் கலந்து அருந்தி வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெறும்.
  • கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவிற்கு பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி, வலி, களைப்பு ஏற்படாது. சோகை நீங்கி பிறக்கும் குழந்தையும் வலுவாக இருக்கும்.
  • கேரட் சாறுடன் பாதாம் பருப்புகள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன் மஞ்சள் காமாலை நோயை விரைந்து குணமாக்கும். ரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதால் மூட்டு வீக்கம், வாத நோய்கள் தீரும்.
  • கேரட்டின் மேல் தோலை சீவி துருவி விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், கொத்துமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊற வைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இப்படி பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் கேரட்டினை நாமும் தினமும் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்வோம்.
 - நாகை சத்யா பாபு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com