குரு பூர்ணிமாவில் இவர்களை எல்லாம் வழிபடுவது நல்லது!

ஆடி மாதம் வரும் முதல் பெளர்ணமி தினம்தான் ‘குரு பூர்ணிமா’. இந்த குரு பூர்ணிமா தினத்தில் குரு பூஜை செய்வது வழக்கம்.
குரு பூர்ணிமாவில் இவர்களை எல்லாம் வழிபடுவது நல்லது!

ஆடி மாதம் வரும் முதல் பெளர்ணமி தினம்தான் ‘குரு பூர்ணிமா’. இந்த குரு பூர்ணிமா தினத்தில் குரு பூஜை செய்வது வழக்கம். குரு பூர்ணிமாவை வியாச பூர்ணிமா எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. இது பல காலங்களால கொண்டாடப்பட்டு வருகின்றது. குரு பூர்ணிமா தினத்தில் கல்வியை போதித்த ஆசிரியரை வணங்கும் ஒரு நாள். 

இந்த தினத்தில் வேதம் படித்த மாணவர்கள் தங்களுடைய குருவை நினைத்து வணங்கும் ஒரு நாளாக இதை அனுஷ்டிக்கலாம். நம் பாரம்பரியத்தை நினைவில் வைத்துள்ள சில பள்ளிகள் இன்றளவும் குருவுக்கு பாத பூஜை செய்து குரு பூர்ணிமாவை பின்பற்றிவருகின்றன. அது இயலாவிட்டாலும் இன்றைய தினத்தில் குறைந்த பட்சம் நம் பள்ளி / கல்லூரி ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூரலாம். 

கல்வி அளித்த நம் குருவை வழிபடுவதுடன், குரு பகவானை, தட்சிணாமூர்த்தியை., பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, ஆதி சங்கரர், ராமானுஜர், வியாசர் உள்ளிட்டவர்களை இந்நாளில் வழிபடலாம். புத்தரை வழிபடுவதும் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com