கோயில் நில ஆக்கிரமிப்பு பிரச்னை

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள நந்தீஸ்வர் கோயிலுக்குச் சொந்தமான 3 கிரவுண்ட் 700 சதுர அடி நிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுத்தவர்கள் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள நந்தீஸ்வர் கோயிலுக்குச் சொந்தமான 3 கிரவுண்ட் 700 சதுர அடி நிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுத்தவர்கள் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலம் தொடர்பாக பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளன.    இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்,  அமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் பேசப்பட்டது. 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை,  இந்த நிலத்துக்கு பட்டா வழங்க கோரி 2011-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நந்தீஸ்வர் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக  தீவிர விசாரணை நடத்தி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மக்கள் விழிப்புணர்வு 
இயக்கம், நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com