வேகத்தடை அமைக்கப்படுமா?

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் 173 -ஆவது வட்டம் மற்றும் 126 -ஆவது வட்டத்தில் கடற்கரை பகுதியில் லூப் சாலை உள்ளது.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் 173 -ஆவது வட்டம் மற்றும் 126 -ஆவது வட்டத்தில் கடற்கரை பகுதியில் லூப் சாலை உள்ளது. சீனிவாசபுரம் பகுதியில் கூலித் தொழிலாளர்களும், மீனவ மக்களும் பெருமளவில் வசிக்கின்றனர். இந்த கடற்கரை லூப் சாலை வழியாகத் தான் சீனிவாசபுரத்திற்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது வேகத்தடை இல்லாததால் பல்வேறு தருணங்களில் விபத்துகள் நேரிடுகின்றன. சாலையைக் கடக்க முடியாமல் பொதுமக்களும், குழந்தைகளும் அடிக்கடி விபத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே, அருள்மிகு கருமாரியம்மன் பகுதி-சீனிவாசபுரம் செல்லும் இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பி.பிச்சை,
பட்டினப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com