ஆகாஷ்தீப்புக்கு தடை விதிக்க வாய்ப்பு

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டத்தின்போது விதிகளை மீறிய வகையில் நடந்துகொண்டதாக இந்திய தாக்குதல் ஆட்ட வீரர் ஆகாஷ்தீப் சிங் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், அவருக்கு 2 ஆட்டங்களில் தடை

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டத்தின்போது விதிகளை மீறிய வகையில் நடந்துகொண்டதாக இந்திய தாக்குதல் ஆட்ட வீரர் ஆகாஷ்தீப் சிங் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், அவருக்கு 2 ஆட்டங்களில் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் முடிவில் அந்த அணி வீரர்களை தவறான வார்த்தைகள் அல்லது செயல்களால் ஆகாஷ்தீப் விமர்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆகாஷ்தீப் மீதான குற்றச்சாட்டை, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தொழில்நுட்பக் குழுவானது, சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை ஆணையருக்கு பரிந்துரைத்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆகாஷ்தீப் சிங்கிற்கு 2 ஆட்டங்களில் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளதால், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடைபெறும் அடுத்த எந்த போட்டிகளிலும் ஆகாஷ்தீப்புக்கு இரு ஆட்டங்களில் தடை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com