டிம் பெயின் சதமடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவரைப் பரிந்துரைப்பேன்: ரோஹித் சர்மா கிண்டல்!

ஸ்டம்புக்குப் பின்னால் நின்றுகொண்டு இந்திய வீரர்களைச் சீண்டும் விதத்தில் தொடர்ந்து பேசிவருகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்...
டிம் பெயின் சதமடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவரைப் பரிந்துரைப்பேன்: ரோஹித் சர்மா கிண்டல்!

ஸ்டம்புக்குப் பின்னால் நின்றுகொண்டு இந்திய வீரர்களைச் சீண்டும் விதத்தில் தொடர்ந்து பேசிவருகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின். 

2-வது நாளான நேற்று ரோஹித் சர்மா விளையாடும்போது அவரைச் சீண்டியபடி இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் யாருக்கு என்னுடைய ஆதரவு என்பதில் குழப்பம் ஏற்படும். இப்போது ரோஹித் சர்மா சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுவேன். நான் எல்லா அணிகளிடமும் விளையாடியுள்ளேன். நீங்களும் எல்லா அணிகளுடன் விளையாடியுள்ளீர்கள், பெங்களூரைத் தவிர.. என்று ரோஹித்தைச் சீண்டிப் பார்த்தார் பெயின். எனினும் இதனால் கோபமடைந்தோ அல்லது உற்சாகமடைந்தோ பந்துவீச்சைப் பதம் பார்க்க ரோஹித் சர்மா முயலவில்லை. ஏற்கெனவே டெஸ்ட் அணியில் இடம் இன்னும் நிரந்தரம் ஆகாததால் பக்குவமாக விளையாடி இந்திய அணி டிக்ளேர் செய்யும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரோஹித் சர்மா. செய்தியாளர்களைச் சந்தித்த தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் இதுபற்றி கூறியதாவது: ரோஹித் சர்மாவுடன் சிறிது நேரம் விளையாடிப் பார்த்தோம். மிட் ஆனை கொண்டுவந்தால் ஐபிஎல் நிலைக்கு மாறி சிக்ஸ் அடிக்கமுடியுமா என ரோஹித்திடம் நான் கேட்டேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் பெயினின் கிண்டல் குறித்து ரோஹித் சர்மாவிடம் இன்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

டிம் பெயின் எனக்குப் பின்னால் இருந்து பேசியதைக் கேட்டேன். நான் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதில் மும்முரமாக இருந்தேன். ஆனால் இதுகுறித்து ரஹானேவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இங்குச் சதமடித்தால் என்னுடைய உரிமையாளரிடம் பேசி அவரை வாங்க முயற்சி செய்வேன். பெயின், மும்பை அணியின் ரசிகர் போல தெரிகிறார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com