துளிகள்...

டெஸ்ட் ஆட்டங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது மிகவும் அவசியமானது என நியூஸிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் தெரிவித்துள்ளார்.

*டெஸ்ட் ஆட்டங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது மிகவும் அவசியமானது என நியூஸிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் தெரிவித்துள்ளார்.
 *யாங்கனில் செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள ஒலிம்பிக் 2020 ஆசிய பிரிவு தகுதிச் சுற்று மகளிர் கால்பந்து ஆட்டத்தில் இந்தியா-உள்ளூர் அணியான மியான்மரை எதிர்த்து ஆடுகிறது.
 *வரும் ஜனவரி மாதம் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள இந்தியா பங்கேற்கும் ஒரு நாள் மற்றும் டி20 தொடர் மைதானங்களின் தன்மை, பிட்ச் சூழலால் அதிக ஸ்கோர்களை குவிப்பவையாக அமையும் என சுழற்பந்து வீச்சாளர் மிச்செல் சான்டெர் தெரிவித்துள்ளார்.
 *தமிழகத்துக்கு எதிரான குரூப் பி ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் துவக்க நாளில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்துள்ளது.
 *ரசிகரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறிய விவகாரத்தில் கேப்டன் விராட் கோலி, உணர்ச்சி வசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து கூறியுள்ளார் என 5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.
 *இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வரும் 17-ஆம் தேதி அம்மானில் ஜோர்டானுடன் நடைபெறவுள்ள கால்பந்து நட்பு ஆட்டத்தில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
 *ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 14 இடங்கள் முன்னேறியுள்ளார்.
 *இந்தியாவில் நடைபெறவுள்ள உலக ஹாக்கி சாம்பியன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக இறுதியில் ஸ்பான்ஸரை கண்டுபிடித்தது பாக். ஹாக்கி சம்மேளனம்.
 *டோஹாவில் நடைபெறவுள்ள 2019 உலக தடகள சாம்பியன் போட்டியில் தரவரிசை பட்டியல் முறை (ரேங்கிங்) பின்பற்றப்படாது என சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com