உலக மகளிர் குத்துச்சண்டை: மனிஷாமௌன் அபாரம்

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி 54 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மனிஷாமெளன் அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினாவை பதம் பார்க்கும் இந்திய வீராங்கனை மனிஷா.
அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினாவை பதம் பார்க்கும் இந்திய வீராங்கனை மனிஷா.


உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி 54 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மனிஷாமெளன் அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
புது தில்லியில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் உலக சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். மூத்த வீராங்கனை மேரி கோம் தலைமையில் 10 வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி போட்டியில் பங்கேற்றுள்ளது. மேரி கோம், சரிதா ஆகியோர் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஹரியாணாவைச் சேர்ந்த 20 வயது மனிஷாமெளன் முதன்முறையாக களம் கண்டார். அவர் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா குரூஸை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 
கிறிஸ்டினா ஏற்கெனவே உலக சாம்பியன் போட்டியில் 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றவர். முதல் மூன்று சுற்றுகளிலேயே மனிஷா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி எளிதாக வென்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாக் அவுட் சுற்றில் (ரவுண்ட் 16) நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் டினா ஸோலோமேனை எதிர்கொள்கிறார். 
சரிதா தேவி வெற்றி: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி 4-0 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்விஸ் வீராங்கனை எஸ்டி. பிரக்கரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com