ஏடிபி பைனல்ஸ்: அரையிறுதியில் பெடரர்

ஏடிபி பைனல்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் உலகின் மூன்றாம் நிலை வீரர் ரோஜர் பெடரர்.
ஏடிபி பைனல்ஸ்: அரையிறுதியில் பெடரர்


ஏடிபி பைனல்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் உலகின் மூன்றாம் நிலை வீரர் ரோஜர் பெடரர்.
உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீரர்கள் கலந்து கொள்ளும் ஆண்டு இறுதிப் போட்டியான ஏடிபி பைனல்ஸ் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 6-3 6-4 என நேர் செட்களில் வென்ற பெடரர் 15-ஆவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார். தனது 100-ஆவது ஏடிபி பட்டத்தை எதிர்நோக்கி உள்ளார் பெடரர்.
டொமினிக் தீம் 6-1, 6-4 என நேர் செட்களில் நிஷிகோரியை வீழ்த்தியதால், கெவின் ஆண்டர்சனும் அரையிறுதிக்கு நுழைந்தார். இதன் மூலம் முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். தனது குழுவில் 2-1 என வெற்றியின் மூலம் முதலிடம் பெற்ற பெடரர், அரையிறுதியில் ஜோகோவிச்சுடன் மோதும் வாய்ப்பை தடுத்து விட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com