2014 ஒப்பந்த பிரச்னையில் இழப்பீட்டை தருவதாக பிசிசிஐ கூறியது: பிராவோ தகவல்

கடந்த 2014-ஆம் ஆண்டு மே.இ.தீவுகள் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தப் பிரச்னை நிலவிய போது, எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தருவதாக பிசிசிஐ கூறியிருந்தது என அந்த அணியின்
2014 ஒப்பந்த பிரச்னையில் இழப்பீட்டை தருவதாக பிசிசிஐ கூறியது: பிராவோ தகவல்


கடந்த 2014-ஆம் ஆண்டு மே.இ.தீவுகள் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தப் பிரச்னை நிலவிய போது, எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தருவதாக பிசிசிஐ கூறியிருந்தது என அந்த அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ கூறியுள்ளார்.
கடந்த 2014-இல் இந்தியாவில் ஒரு நாள் தொடரில் மே.இ.தீவுகள் அணி பங்கேற்றது. அப்போது அந்நாட்டு வாரியத்துக்கும், வீரர்களுக்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதனால் வீரர்கள் தொடரில் விளையாடாமல் வெளியேறுவோம் எனக்கூறினர்.
இதுதொடர்பாக பிராவோ சனிக்கிழமை கூறியதாவது: அப்போது அதிகாலை 3 மணிக்கே பிசிசிஐயின் அப்போதைய தலைவர் சீனிவாசன், எங்களுக்கு செய்தி அனுப்பினார். எங்களுக்கு ஏற்படும் இழப்பு என்னவோ அதை பிசிசிஐ ஈடுசெய்யும் எனத் தெரிவித்தார். 
ஊதிய ஒப்பந்த பிரச்னை எதிரொலியாக தர்மசாலாவில் 4-ஆவது ஒருநாள் ஆட்டத்தின் மத்தியில் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய உள்ளதாக மே.இ.தீவுகள் வாரியம் தெரிவித்தது.
பிசிசிஐ எங்கள் பிரச்னைகளை புரிந்து கொண்டது. இதனால் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. இதனால் தான் பெரும்பாலான வீரர்கள் தொடர்ந்து எந்தவித சிக்கலும் இன்றி விளையாடி வருகின்றனர். எனக்கு அப்போது அதிகாலையில் சீனிவாசன் செய்தி அனுப்பியதை அடுத்து நான் வீரர்களிடம் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டேன். அனைத்து வீரர்களும் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிச் செல்ல உறுதியாக இருந்தனர். ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் திரும்பிச் சென்றுவிடுவதாக கூறியும் நாங்கள் ஆடினோம் என்றார் பிராவோ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com