தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தையும் வென்றதின் மூலம் 2-0 என தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து.

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தையும் வென்றதின் மூலம் 2-0 என தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள், டி 20 தொடர்களில் பங்கேற்று இலங்கையில் ஆடி வருகிறது. ஏற்கெனவே ஒருநாள், டி20 தொடர்களை கைப்பற்றிய நிலையில், காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்திலும் இங்கிலாந்து வென்றிருந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் கண்டியில் நடைபெற்றது.இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்களையும், இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 346 ரன்களை குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கு 301 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை 74 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது.
இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து.
ஆட்ட நாயகனாக கேப்டன் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் அபாரமாக பந்துவீசி 5-83, மொயின் அலி 4-72 விக்கெட்டை சாய்த்தனர். கடந்த 2001-இக்கு பின் இலங்கை மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் தொடர் வெற்றியாகும். மேலும் 2015-இல் தென்னாப்பிரிக்காவில் வென்றதற்கு பின் அயல்நாட்டில் வென்ற தொடரும் இதுவாகும்.
இந்த வெற்றி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தை பெற ஊக்கம் தருகிறது என கேப்டன் ரூட் கூறினார். அனைத்து நாடுகள், எந்த வகையான ஆடுகளங்களிலும் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடுவர் என நிரூபித்துள்ளனர் என்றார்.
மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் கொழும்புவில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com