பட்டம் வெல்வதற்கு சரியான தருணம்

உலகக் கோப்பை ஹாக்கியில் பட்டம் வெல்ல இது சரியான தருணம் என இந்திய அணியின் துணை கேப்டன் சிங்கலென்சனா சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை ஹாக்கியில் பட்டம் வெல்ல இது சரியான தருணம் என இந்திய அணியின் துணை கேப்டன் சிங்கலென்சனா சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
புவனேசுவரத்தின் கலிங்கா மைதானத்தில் உலக ஹாக்கி சாம்பியன் போட்டி வரும் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16 வரை நடக்கிறது.
இதுதொடர்பாக சிங்கலென்சனா கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களில் ஒரு அணியாக நாங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு தயாராகி வந்தோம். அண்மைக்கால போட்டி முடிவுகளைப் பார்க்கும் போது, தற்போது வெற்றியை பெறும் தருணமாகும்.
முந்தைய போட்டிகளில் செயல்பாடுகளை மறந்து விட்டு வெற்றியை நோக்கமாக கொள்ள வேண்டும். கேப்டன் மன்ப்ரீத் சிங், சுமித், நீலகண்ட சர்மா ஆகியோருடன் மிட்பீல்டில் ஆடும் சிங்கலென்சனா வீரர்கள் ஒவ்வொருவரும் வெற்றிக்காக பாடுபடுவர். இந்தியா தற்போது ஜூனியர் உலக சாம்பியனாகவும் உள்ளது கூடுதல் சாதகம் என்றார் அவர்.
199 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடிய சிங்கலென்சனா, புவனேசுவரத்தில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் 200-ஆவது ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com