உலக மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு மேரி கோம் உள்பட 4 இந்திய வீராங்கனைகள் தகுதி

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை மேரி கோம், லவ்லினா போரோகைன் உள்பட 4 இந்திய வீராங்கனைகள்
வெற்றி மகிழ்ச்சியில் மேரி கோம்.
வெற்றி மகிழ்ச்சியில் மேரி கோம்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை மேரி கோம், லவ்லினா போரோகைன் உள்பட 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 6-ஆம் நாளா செவ்வாய்க்கிழமை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு எடைப் பிரிவுகளில் 8 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர்.
7-ஆவது பதக்கத்தை உறுதி செய்த மேரி கோம்: 6-ஆவது முறையாக தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ள மேக்னிபிஷியன்ட் மேரி எனப்படும் மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவு லைட் பிளைவெயிட் காலிறுதிச் சுற்றில் சீனாவின் வூ யுவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் உலக சாம்பியன் போட்டிகளில் குறைந்தபட்சம் வெண்கலத்துடன் தனது 7-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 
இதுதொடர்பாக மேரிகோம் கூறியதாவது:
சீன வீராங்கனையுடன் மோதிய ஆட்டம், கடினமும் இல்லை, எளிதாகவும் இல்லை. சீனாவில் நல்ல குத்துச்சண்டை வீராங்கனைகள் தொடர்ந்து வருகின்றனர். வூ யுவை இதற்கு முன்பு எதிர்கொள்ளவில்லை. களமிறங்கியதும், அவரது ஆட்டத்தை அறிந்த பின் எனக்கு பிரச்னை ஏதுமில்லை என்றார். அரையிறுதியில் வட கொரிய வீராங்கனை கிம் ஹயாங் மீயுடன் மோதுகிறார் மேரி.

லவ்லினா அபாரம்
அஸ்ஸாமைச் சேர்ந்த லவ்லினா போரோகைன் 69 கிலோ பிரிவில் ஆஸி வீராங்கனை ஸ்காட் பிரான்ùஸஸை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 
எனது எதிராளியை நான் கவனமாக கையாண்டேன். 
தங்கம் வெல்வதில் தீர்மானமாக உள்ளேன். முதல் உலக சாம்பியன் போட்டியிலேயே பதக்கத்தை உறுதி செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. 
தங்கத்தை தவிர வேறு எதுவும் எனக்கு திருப்தி தராது என்றார்.

அரையிறுதியில் சீன தைபே வீராங்கனை சென் நியன் சின்னை எதிர்கொள்கிறார் லவ்லினா.

சோனியா லேதர்

மற்றொரு காலிறுதியில் 57 கிலோ எடைப்பிரிவில் சோனியா லேதர் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கொலம்பியாவின் யெனிம்மை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


சிம்ரஞ்சித் கெளர்

64 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் சிம்ரஞ்சித் கெளர் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் அயர்லாந்தின் அமி சாராவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மனிஷா, பாக்யபதி, பிங்கி, சீமா புனியா தோல்வி
அதே நேரத்தில் முன்னணி வீராங்கனை மனிஷா மெளன் 54 கிலோ பிரிவில் 1-4 என்ற புள்ளிக்கணக்கில் பல்கேரியாவின் ஸ்டோக்கியா பெட்ரோவாவிடம் வீழ்ந்தார். 
பாக்யபதி கச்சாரி 81 கிலோ பிரிவில் கொலம்பியாவின் ஜெஸ்ஸிகா சினிஸ்டெராவிடம் 2-3 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
51 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் பிங்கி ஜங்கராவும் கொரியாவின் சோல்மிபாங்கும் மோதினர். இதில் 0-5 என்ற புள்ளிக்கணக்கில் பிங்கி தோல்வியடைந்தார். 
81 கிலோ எடைப்பிரிவில் சீமா புனியா சீன வீராங்கனை யாங் ஸியோலியிடம் வீழ்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com