செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

குக், ரூட் சதங்கள்: 4-ம் நாளில் தோல்வியை நெருங்கிய இந்தியா (ஹைலைட்ஸ்)

By எழில்| DIN | Published: 11th September 2018 10:48 AM

 

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. தவன் 1, புஜாரா, கோலி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் 46, ரஹானே 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வெற்றி பெற இந்தியாவுக்கு 406 ரன்கள் தேவைப்படுகின்றன.

Tags : cook century England v India Highlights 5th Test Day 4 Root alastair cook alastair cook test runs alastair cook cricketer

More from the section

நேர்த்தியான பெளலிங்: ரோஹித் சர்மா பாராட்டு
ரோஹித்-தவன் இணையின் அபார ஆட்டத்தில் புதிய சாதனைகள்
2019-இல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்: ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டம்?
ஷோயிப் மாலிக்கை அத்தான் என அழைத்த இந்திய ரசிகர்கள்
மகளிர் டி20: தொடரை வென்றது இந்தியா