ஆசிய கோப்பை: தவன் சதம்; இந்தியா 285

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் ஷிகர் தவன் அபாரமாக
ஆசிய கோப்பை: தவன் சதம்; இந்தியா 285


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் ஷிகர் தவன் அபாரமாக ஆடி சதம் கடந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் குரூப் ஏ'-வைச் சேர்ந்த இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
பேட் செய்த இந்தியாவில் வழக்கமான ரோஹித் சர்மா - ஷிகர் தவன் கூட்டணி களம் கண்டது. இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் 7.4-ஆவது ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். எஸான் கான் வீசி, ரோஹித் அடித்த பந்து, நிஸாகத் கான் கைகளில் தஞ்சமானது.
அடுத்து வந்த அம்பட்டி ராயுடு, தவனுடன் கைகோத்தார். இந்த கூட்டணி அருமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இந்நிலையில் தவன் 57 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார். 19.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. ராயுடு அரைசதம் தொட்டார்.
இச்சூழலில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 60 ரன்களில் ராயுடு ஆட்டமிழந்தார். அவர் எஸான் நவாஸ் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் மெக்கெஷ்னியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவன்-ராயுடு கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. அடுத்து தினேஷ் கார்த்திக் களம் கண்டார்.
36.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இந்தியா. இதனிடையே, 40.4-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார் தவன். 120 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 127 ரன்கள் எடுத்திருந்தார். அவர், ஷா பந்துவீச்சில் தன்வீர் அஃப்சலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த தோனி அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றே பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
அவர் எஸான் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மெக்கெஷ்னியால் ஸ்டம்பிட் செய்யப்பட்டார். அடுத்து தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரிகளுடன் 33, புவனேஷ்வர் குமார் 9 ரன்களில் வீழ, ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். 50 ஓவர்கள் முடிவில் கேதார் ஜாதவ் 28, குல்தீப் யாதவ் ரன்களின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹாங்காங் தரப்பில் கிஞ்சித் ஷா 3, எஸான் கான் 2, எஸான் நவாஸ், ஐஸாஸ் கான் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.
பின்னர், ஹாங்காங் 286 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி வந்தது.

சுருக்கமான ஸ்கோர்
இந்தியா
50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285
தவன்-127, ராயுடு-60, தினேஷ்-33, கேதார்-28*, குல்தீப்-*
பந்துவீச்சு: 
கிஞ்சித் 3, எஸான் 2
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com