பாகிஸ்தான் போராடி வெற்றி

அபுதாபி, செப். 22: ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் போராடி வெற்றி

அபுதாபி, செப். 22: ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது பாகிஸ்தான்.
 முதலில் ஆடிய ஆப்கன் அணி 6 விக்கெட்டை இழந்து 257 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பாக். அணி 7 விக்கெட்டை இழந்து 258 ரன்களை எடுத்து வென்றது.
 அபுதாபியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 அதன் தொடக்க வீரர்கள் மொகமது ஷஸாத் 20, ஈஷானுல்லா ஜனத் 10, ரஹ்மத் ஷா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்த நிலையில், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஆப்கன் இணை சிறப்பாக ஆடி ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.
 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அஷ்கர் ஆட்டமிழந்தார். நபி 7, நஜிபுல்லா 5 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
 இறுதியில் 7 பவுண்டரியுடன் 97 ரன்களை எடுத்த ஹஸ்மத்துல்லா, 10 ரன்களுடன் நைப் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 257 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான். பாக். தரப்பில் நவாஸ் 3-57, ஷாஹின் அப்ரிடி 2-58, ஹாசன் அலி 1-51 விக்கெட்டை வீழ்த்தினர்.
 பின்னர் களமிறங்கிய பாக். அணியில் பாக்கர் ஸமான், இமாம் உல் ஹக் களமிறங்கினர். எனினும் பாக்கர் ரன் ஏதுமின்றி முஜிப் பந்தில் போல்டானார். பின்னர் இமாம்-பாபர் ஆஸம் இணை நிதானமாக ஆடி ரன்களை குவித்தது. 12-ஆவது ஓவரின் போது 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை பாக் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து இமாம் உல் ஹக் 80 , பாபர் ஆஸம் 66 , ஹாரிஸ் சோஹைல் 13 , கேப்டன் சர்ஃபராஸ் 8 , அஸிப் அலி 7, முகமது நவாஸ் 10, ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
 ஷோயிப் மாலிக் மட்டுமே இறுதி வரை நிலைத்து ஆடி 51 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஹாசன் அலி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 வெற்றிக்காக கடுமையாக போராடிய பாக் அணி 49.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 7 விக்கெட்டை இழந்து 258 ரன்களை எடுத்து வென்றது அந்த அணி. ஆப்கன் தரப்பில் ரஷித் கான் 3, முஜிப்புர் ரஹ்மான் 2, நைப் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com