இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஆனார் ஸ்மிருதி மந்தனா!

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் குவஹாட்டியில் மார்ச் 4 முதல் தொடங்கவுள்ளது. 
இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஆனார் ஸ்மிருதி மந்தனா!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அதிரடி இளம் வீரர் ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய மகளிர் டி20 கேப்டனான ஹர்மண்ப்ரீத் கெளர், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து டி20 கேப்டன் பதவி மந்தனாவுக்குச் சென்றுள்ளது. இந்திய டி20 அணியின் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜும் இடம்பெற்றுள்ளார். அணியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட வேதா கிருஷ்ணமூர்த்தி மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் குவஹாட்டியில் மார்ச் 4 முதல் தொடங்கவுள்ளது. 

அணி விவரம்: ஸ்மிருதி மந்தானா (கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, தனியா பாட்டியா, பார்தி புல்மாலி, அனுஜா பட்டீல், ஷிகா பாண்டே, கோமல் ஜன்ஸாட், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் தியோல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com