ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணிகளை அனுப்ப வேண்டும்: இந்திய ஒலிம்பிக் சங்கம் கோரிக்கை

சீனாவில் நடைபெறவுள்ள 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது... 
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணிகளை அனுப்ப வேண்டும்: இந்திய ஒலிம்பிக் சங்கம் கோரிக்கை

சீனாவில் நடைபெறவுள்ள 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 

2010, 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் பங்கேற்றது. எனினும் இந்தோனேஷியாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஹாங்ஷுவில் நடைபெறவுள்ள அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணிகளை (ஆடவர் & மகளிர்) அனுப்பவேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடுப்போம். இரு அணிகளும் பதக்கம் பெற வாய்ப்புண்டு. இதன்மூலம் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் (பொது) ராஜீவ் மேத்தா கூறியுள்ளார். 2010, 2014 ஆசிய விளையாட்டிப் போட்டிகளில் நடைபெற்றதுபோல 2022-லும் டி20 கிரிக்கெட் வகையே தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com