அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சாதனையுடன் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ்: மீண்டும் பட்டத்தை தக்க வைக்குமா?

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல் 2019) போட்டிகளில் அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு (9) முறை இடம் பெற்ற சாதனையுடன் திகழும், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைக்குமா
அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சாதனையுடன் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ்: மீண்டும் பட்டத்தை தக்க வைக்குமா?


இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல் 2019) போட்டிகளில் அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு (9) முறை இடம் பெற்ற சாதனையுடன் திகழும், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிசிசிஐ சார்பில் கடந்த 2008-இல் இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டன. தற்போது நடைபெறுவது 12-ஆவது சீசன் போட்டியாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012), மும்பை இந்தியன் (2013), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2014), மும்பை இந்தியன்ஸ் (2015), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (2016), மும்பை இந்தியன்ஸ் (2017), சென்னை சூப்பர் கிங்ஸ் (2018) ஆகியவை முந்தைய சீசன்களில் பட்டம் வென்ற அணியாகும்.
கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் அணிகளிலேயே தொடர்ந்து நிலைத்தன்மையுடன் ஆடி வரும் சிறப்புடையது.

9 முறை பிளே ஆஃப் சுற்று

3 முறை சாம்பியன், 4 முறை ரன்னர் அப் ஆகிய சிறப்புகளை பெற்றுள்ளது சிஎஸ்கே. அதே போல் தான் பங்கேற்று ஆடிய 9 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுகளிலும் தவறாமல் இடம் பெற்ற அணி என்ற சாதனையை சூப்பர் கிங்ஸ் செய்துள்ளது. 
மேலும் 7 முறை இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக் டி20 ஆட்டங்களிலும் 2 முறை வென்றுள்ளது.

2 ஆண்டுகள் தடை
ஐபிஎல் ஆட்டங்களில் நடைபெற்ற மேட்ச் பிக்ஸிங், சூதாட்டப்புகார் எதிரொலியாக 2016, 2017 சீசன்களில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் தடைசெய்யப்பட்டன. தடைக்காலம் முடிந்த நிலையில் கடந்த 2018 மீண்டும் லீகில் இணைந்து சென்னை அணி.
இதன் தொடர்ச்சியாக அந்த சீசனிலேயே மீண்டும் மூன்றாவது முறையாக பட்டம் வென்றது. 
கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ஆகியோரது வழிகாட்டுதால் சிஎஸ்கே தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.  கடந்த 2018-இல் சிஎஸ்கே பெயர், 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.445 கோடி) ஆக மதிப்பிடப்பட்டது.
சென்னை அணியில் தோனி, சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சன், டுபிளெஸிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், கரண் சர்மா, சர்துல் தாகுர், தீபக் சஹார். மொகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

தோனியால் கூடுதல் பலம்
சிஎஸ்கே அணியின் பிரதான பலமே அதன் கேப்டன் தோனி தான். பயிற்சியாளர் பிளெமிங்குடன் இணைந்து, சீரான முடிவுகளை தோனி எடுப்பதால், அணியின் கவனமும் திசை திரும்பாமல் உள்ளது. அதே நேரத்தில் பல்வேறு வீரர்கள் தங்கள் பங்கை ஆற்றி சிஎஸ்கேவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
சிஎஸ்கே அணி முந்தைய சீசனில் இடம் பெற்றிருந்த 23 வீரர்களை அணியில் அப்படியே வைத்துள்ளது. மேலும் சொந்த மைதானத்தில் ஆடிய ஆட்டங்களில் 70 சதவீதம் வெற்றியை குவித்துள்ளது சென்னை. 

வலுவான பேட்டிங் 
சிஎஸ்கே அணிக்கு மிகவும் பலம் சேர்ப்பது பேட்டிங் ஆகும். தோனி, பிராவோ, மிச்செல் சான்ட்னர், ஜடேஜா, ஷேன்வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோர் பேட்டங்கில் அபாரமாக ஆடி வருகின்றனர். ஜாதவ் அணியில் உள்ளது பேட்டிங்கை மேலும் வலுவாக்கி உள்ளது.

சிக்கல் நிறைந்த பந்துவீச்சு, பீல்டிங்
அதே நேரத்தில் கடைசி ஓவர்களில் பந்துவீச்சு, பீல்டிங் போன்றவை  சிக்கலான நிலையில் உள்ளன. ரெய்னா-மெக்கல்லம்-டுபௌஸிஸ் ஆகியோர் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவர். எனினும் பீல்டிங்கில் ஒருங்கிணைந்து செயல்பட பயிற்சியாளர் ஹஸி வலியுறுத்தியுள்ளார். பந்துவீச்சில் சர்துல் தாகுர், மொகித் சர்மா, தீபக் சஹார், ரவீந்திர ஜடேஜா இருந்தாலும் சற்று பலவீனமாகத் தான் உள்ளது. 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com