6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகளை இயக்கத் தடை; மின்சாரம் துண்டிக்கப்படும்

கஜா புயல் கரையை கடக்கும் போது காற்று பலமாக வீசும் என்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறைக்கு வருவாய்த் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 936 அவசர கால ஊர்திகள், 405 ஆம்புலன்ஸ்கள், 41 இரு சக்கர வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடக்கும் போது நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பையும், தொலைத் தொடர்பையும் துண்டிக்குமாறு தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, புயல் கரையைக் கடக்கும் போது செல்போனில் பேசவோ, செய்திகளைப் படிக்கவோ இயலாது என்பதால், வானொலி அலைவரிசைகளைப் பயன்படுத்தி புயல் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளலாம். 

கஜா புயல் நிலவரம்: அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உடனுக்குடன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com