ஆம்னி என் அத்தை !

80- 90 களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஆம்னி. விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் கதாநாயகியாக நடித்தவர்.
ஆம்னி என் அத்தை !

80- 90 களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஆம்னி. விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் கதாநாயகியாக நடித்தவர்.  அப்போது தமிழ் சினிமா பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.காஜாமைதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.  தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.   இந்நிலையில், அவரது தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.  கருப்பையா முருகன் எழுதி இயக்கும்  படத்தில்  அசோக் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு  "விடியாத இரவொன்று வேண்டும்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹ்ரித்திகா கூறுகையில், ""என் அத்தை ஆம்னி மாதிரி சினிமாவில் புகழ்பெற ஆசை. பரதம் கற்றுள்ளேன். என் பூர்வீகம் ஆந்திரா. வளர்ந்தது தமிழ்நாடு. இப்போது பெங்களூரு கல்லூரியில் படிக்கிறேன். நான் அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com