ஹாக்கி பின்னணியில் ஆதி 

"ஹிப் ஹாப் தமிழா'  என்ற ஆல்பம் மூலம் இணைய தளங்களில் வலம் வந்தவர் ஆதி.  பின்னாளில் இசையமைப்பாளராக கவனம்  ஈர்த்த இவர்,  தற்போது கதாநாயகனாக நடிக்கிறார்.
ஹாக்கி பின்னணியில் ஆதி 

"ஹிப் ஹாப் தமிழா'  என்ற ஆல்பம் மூலம் இணைய தளங்களில் வலம் வந்தவர் ஆதி.  பின்னாளில் இசையமைப்பாளராக கவனம்  ஈர்த்த இவர்,  தற்போது கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கெனவே நடித்த  "மீசைய முறுக்கு'  படம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.  அடுத்து இவர் நடிக்கும் படத்துக்கு  "நட்பே துணை'  எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் இயக்குநர்  சுந்தர்.சி தயாரிக்கிறார்.  ஆதிக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.  கதை எழுதி டி. பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.  ஹாக்கி விளையாட்டை பின்னணியாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஹாக்கியில் சிறந்து விளங்கும் ஊர்களுக்கு சென்று அங்கிருக்கும் சூழல்களில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.    நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  தரங்கம்பாடி, காரைக்கால்,  பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  ஆதியே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

"இரவுக்கு ஆயிரம் கண்கள்',  "டிமாண்டி காலணி' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த  அரவிந்த் சிங் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கரு.பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கெüசல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com