பிடித்த பத்து: என்னைக் கவர்ந்த நாடு!

முன்னாள் முதல்வரின் குடும்ப உறுப்பினர். இந்நாள் நடிகர், தயாரிப்பாளரின் மனைவி.  இரண்டு தமிழ்ப்  படங்களின் இயக்குநர். சிலகாலம்  ஊடகத் துறையிலும்  இருந்துள்ளார்.
பிடித்த பத்து: என்னைக் கவர்ந்த நாடு!

முன்னாள் முதல்வரின் குடும்ப உறுப்பினர். இந்நாள் நடிகர், தயாரிப்பாளரின் மனைவி.  இரண்டு தமிழ்ப்  படங்களின் இயக்குநர். சிலகாலம்  ஊடகத் துறையிலும்  இருந்துள்ளார்.  கிருத்திகா உதயநிதி தனக்கு "பிடித்த  பத்து' பற்றி இங்கு கூறுகிறார்:

தாய்: இந்த உலகுக்கு என்னை தந்தவர்.  என் தாயார் ஜோதி ராமசாமி  எனக்கு எல்லாமுமாணவர். நல்ல தைரியசாலி. வாழ்கையின் ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். பெண்ணாக நான் பிறந்து விட்டேன் என்றாலும் என்னையும் அதே தைரியதுடன் வளர்த்தவர்.  எனது தாய் தந்தை இருவருமே காதலித்து கல்யாணம் செய்தவர்கள். அப்பொழுது அம்மா பேராசிரியராக வேலை செய்து கொண்டிருந்தார்.  அப்பா பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்.  அம்மா, எனது அப்பாவின் தொழிலுக்கும் உதவியாக இருந்ததோடு,  வேலைக்கும் சென்ற நிலையிலும்  என்னை வளர்த்து ஆளாக்கியது பெரிய விஷயம்.  அவர் என்னை கண்டிப்புடன்  வளர்த்தது கிடையாது. நானும் எனது குழந்தைகளை அப்படியே வளர்க்கிறேன்.  

உடற்பயிற்சி: நடைப்பயிற்சி,  உடற்பயிற்சி, யோகா இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதவை. நான் பல ஆண்டுகளாக இவை அனைத்தையும் மறக்காமல் செய்து வருகிறேன். வெளிநாடுகள் சென்றாலும் நடைபயிற்சி, யோகா  கண்டிப்பாக செய்து விடுவேன்.  இதனால்தான் எண்ணம், செயல், அசதி இல்லாத உடல் உழைப்பு, சரியான சிந்தனை ஆகியவை கிடைக்கின்றன என்று நம்புகிறேன். 

தோழிகள்: நான் சந்தோஷமாக இருப்பதற்கேற்ற ஆரோக்கிய டானிக். பள்ளியில் என்னுடன் படித்தவர்களும் இன்றும் எனது தோழிகளாக இருக்கிறார்கள். கல்லூரி தோழிகள் என்றும், ஜிம் தோழிகள் என்றும்  பல்வேறு தோழிகள்  உள்ளனர்.  இவர்கள் எல்லோருமே எனக்கு மிக முக்கியமானவர்கள்.  ஒருவரை சொல்லி  மற்றவரை விட்டுவிட  மனமில்லாததால்  யார் பெயரையும் சொல்ல விரும்பவில்லை.  ஆனாலும் ஒரு தோழி, ஆர்த்தி.  எனது பள்ளிப் பருவ நாட்களில் இருந்து என்னுடன் பழகுகிறார். இவர் பெங்களூரில் இருக்கிறார். எனது பிறந்தநாள் அன்று சென்னை வந்துவிடுவார்.   மாதம் ஒருமுறையேனும் ஒரு  குழுவுடன் நாங்கள் சினிமாவிற்கோ அல்லது வேறு ஒரு ஊருக்கோ செ ன்றுவிடுவோம்.  

நட்சத்திர தேடல்: சிறுவயதில் இருந்தே வானத்தைப் பார்ப்பதும் நட்சத்திரத்தைப் பார்த்து வியப்பதும் எனக்கு பழக்கம். அதனாலேயே வானசாஸ்திரத்திலே (அஸ்ட்ரோனமி) சம்பந்தப்பட்ட  புத்தகங்கள் என்றாலும் சரி, ஹ்ர்ன்ற்ன்க்ஷங் - இல் அது சம்பந்தமான படங்களையும்  ரசிப்பதுண்டு.   மொட்டை மாடிக்கு சென்று வானத்தையும், நட்சத்திரத்தையும் பார்த்துக் கொண்டே  இருக்க சொன்னால் எனக்கு  மகிழ்ச்சிதான்.

சுற்றுசூழல்: நம்மை சுற்றியிருக்கும் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் சரியாக இருக்க வேண்டும்.  நான் பிளாஸ்டிக் பொருட்களை  உபயோகிப்பதில்லை. என் பிறந்த நாள்,  திருமண நாள், புதுப் பட ஆரம்ப நாள், என்று என் சம்பந்தமாக எது நடந்தாலும் அன்று மரம் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று எனக்கு விருப்பம்தான். அதற்கு நேரம் காலம் எல்லாம் சரியாக அமையவேண்டும் இல்லையா?    

கிண்டில்: இது ஒரு ஈ-புக். எந்த புத்தகத்தையும் இதில் நீங்கள் படித்து இன்புறலாம்.  புத்தகங்களை வாங்க முடியாதவர்கள். இந்த கிண்டில் செயலியை  ஸ்மார்ட் போனிலோ,  லேப் டாப்பிலோ பதிவிறக்கம் செய்து கொண்டால்  எந்த இடத்திற்கு சென்றாலும்  பொழுது  சூப்பராக போகும்.   இதில் சமீபத்தில் நான் படித்த புத்தகம்   ஜப்பான் தேசத்து எழுத்தாளர் ஹருக்கி முரகாமி (ஏஹழ்ன்ந்ண் ஙன்ழ்ஹந்ஹம்ண்) எழுதியது.  இப்பொழுது தொடங்கி உள்ளது ரஸ்ய நாட்டின் ஆசிரியர் ஊஹ்ர்க்ர்ழ் ஈர்ள்ற்ர்ஹ்ங்ஸ்ள்ந்ஹ் எழுதிய ‘பட்ங் ஐக்ண்ர்ற்’  என்ற புத்தகம். கல்லூரி நாட்களுக்கு முன்பே புத்தகம் படிப்பது ஆரம்பித்தது. நடுவே பிள்ளைகள் பிறந்ததால் இடைவெளி ஏற்பட்டது.   இப்போது, இந்த ஈ-புக் கிடைத்ததால்  நிறைய புத்தகங்கள் படிக்கும் ஆவல் பிறந்துள்ளது.   

எழுத்து: எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஆரம்பத்தில் பத்திரிகைகளுக்கு கதை,  கட்டுரை எழுதுவதில் இருந்து தொடங்கி, விளம்பரப் படங்களுக்கு எழுதுவதில் தாவி, இன்று முழுநீள படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதுவது வரை அது வளர்ந்திருக்கிறது. இதற்கிடையே,  ஒரு பத்திரிகையையும் வெளிக் கொணர்ந்துள்ளேன். இவை எல்லாமே எழுத்தின் ஒவ்வொரு பரிமாணம்தானே. 
குடும்பம்: என் அண்ணன் கிரிஷ் அறிவாளி, அமைதியானவர்.  இந்த இரண்டு விஷயங்களும் என்னிடமும் உண்டு என்று பலர் கூறும் போது நான் எனது சகோதரனுக்கு தான் மானசீகமாக நன்றி சொல்வேன். அதே போல் புகுந்த வீட்டில் எனது கணவர் உதயநிதியும் சரி, எனது மாமனார், மாமியார், நாத்தனாரும் சரி என் மேல் அதிகமாக பாசம் வைத்துள்ளார்கள். குறிப்பாக, எனது மாமியாரும் மாமனாரும் என்னை தங்கள் மகளை விட மேலாக பார்த்துக் கொள்கிறார்கள்.  சந்தோஷமான குடும்பத்தில் இருந்து வந்தேன்; அதே மாதிரி குடும்பமும் எனக்கு அமைந்து விட்டது. நான் அதிர்ஷ்டசாலி இல்லாமல் வேறு என்ன?.

சென்னை: இந்த சிங்கார சென்னையில்தான் நான் பிறந்தேன், படித்தேன், வளர்ந்தேன். நான் முன்பே சொன்னதை போல் என் அம்மா என்னை தைரியசாலியாக வளர்த்தார். இந்த சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்கள்  எனக்கு தெரியும். நடந்தும், பஸ்சிலும், மிதிவண்டியிலும் அலைந்திருக்கிறேன். எந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பினாலும்  இனம் புரியாத ஒரு சந்தோஷம் என் மனதில் தோன்றும்.                    
பயணம்: நான் பல்வேறு நாடுகளுக்குச்  சென்றிருக்கிறேன் என்றாலும், எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு விதத்தில் நம்மை கவர்ந்துவிடும்.  ஆனால் என்னை அதிகம் கவர்ந்த நாடு என்றால் அது ஜப்பான்தான். அங்குள்ள மக்களின்  பண்பும் பாசமும் என்னை அவர்களைபற்றி சொல்ல தூண்டுகிறது என்று நினைக்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com