இணைய வெளியினிலே...

புல்வெளியில் நிழல் பரப்பும் மரவெளியும், இளவெயிலும், பேரழகு.
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....


புல்வெளியில் நிழல் பரப்பும் மரவெளியும், 
இளவெயிலும், பேரழகு.

- சுந்தரபுத்தன் நடராஜன்


உலகில் இரு வகை கதைகளே உள்ளன. 

1. கதை
2. சுட்டகதை!

- நேசமிகு ராஜகுமாரன்


சிலரிடம்   பேசி   என்ன  ஆகப்போகிறதென்று
சிலரிடம்   பேசுவதில்லை...
சிலரைப்  பார்த்து  என்ன  ஆகப்போகிறதென்று
சிலரைப்  பார்ப்பதில்லை...
அப்படி    சில   நேரங்களில்
வாழ்ந்து  என்ன  ஆகப்போகிறதென்று...
தோன்றிவிடுவதும்  உண்டு.

- ரெவித்தம்பி பொன்னன்

நாம் மெழுகுவர்த்தியைச் சுமக்கிறோம்... 
உலகம் வெளிச்சத்தைச் சுமக்கிறது.

- டிகே கலாப்ரியா


நிஜத்தில் சொல்லும் பொய்யைக் கூட கண்டுபிடித்து விடலாம்.
புனைவில் மனிதன் சொல்லும் பொய்யைக் கடவுளாலும் 
கண்டு பிடிக்க முடியாது !

- பாதசாரி விஸ்வநாதன்

சுட்டுரையிலிருந்து...

பேசிக் கொண்டே இருப்பவர்களுக்கு...
கேட்கக் கூடிய பொறுமை இருக்காது.

- சப்பாணி


கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு நல்ல இடத்துக்கு வந்தவனால மட்டும் தான்...
அதே இடத்துக்கு இன்னொருத்தரைக் கஷ்டப்படாம கொண்டு வர முடியும்.
ஆனா, அவங்களுக்கு அந்த இடத்தை கையாளவும் தெரியல; கடைப்பிடிக்கவும் முடியலை.

- விருச்சிகன்

சோகம் என்னும்  பறவைகள் உங்கள் தலைக்கு  மேல் பறப்பதை உங்களால் தடுக்க இயலாது...
ஆனால், அவை உங்கள் தலையிலே கூடுகட்டி வாழ்வதை...
உங்களால் தடுக்க இயலும். 

- எலிசை வேலன்

வீணாக்கும் உணவுகளை   உள்ளே போட்டால், அதன் பெயர் தொப்பை. 
வீணான உணவுகளை  வெளியே போட்டால்,  அதன் பெயர் குப்பை.

- ச.மணி


வலைதளத்திலிருந்து...

ஒரு இலக்கியக் கூட்டத்தில் என்ன நடக்கிறது?  பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்களே என்ற ஆவலுடன் "யு ட்யூப்' புண்ணியத்தில்  பார்த்து கேட்டு...  ரொம்பவும் தெளிவடைந்திருக்கிறேன்.
அதாகப்பட்டது...
பேசும் போது... யாரைப் பற்றிப் பேச வேண்டும்,  எதைப் பற்றிப் பேச வேண்டும் என்பதை எல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.  
சும்மா "மாங்கு மாங்கு'னு நோட்ஸ் எல்லாம்  எடுத்து அதில் எது முக்கியமானது இந்தப் பாயிண்டை சொல்லணுமா வேண்டாமான்னு  எதுவும் யோசிக்க வேண்டியதில்லை...
கையில மைக்கை வாங்கினோமா...  உடனே  தன் சுய பிரதாபங்களை 
அளந்துவிட வேண்டும். 
அப்புறம் ஓர் ஏழெட்டு வெளி நாட்டு எழுத்தாளர்களின்  பெயர்களையும் அவர்கள் எழுதிய புத்தகங்கள்/கவிதைகள்/  கதைகள்... என்று பெயர்களை சொல்லிக் கொண்டே  இருக்க வேண்டும். 
அதிலும் குறிப்பாக... ஜனரஞ்சகமான... வாசகர்கள்  வாசித்திருக்கும் எதைப் பற்றியும் மறந்தும் கூட உச்சரிக்க கூடாது... முடிந்தால்...  யாருமே அறியாத... ஒருவர் பெயரைச் சொல்லி  கூட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும்  புருவம் நெரிக்க, "இவர் குறிப்பிடுவது யாராக  இருக்க முடியும்' என்று யோசித்துக்கொண்டிருக்க...
தொடர்ந்து பேச வேண்டும்.  ஒரு வழியாக சுயபிரதாபம் முடியும் போது,  விருப்பமிருந்தால் எதைப் பற்றி பேச வந்தோமோ, அதைப் பற்றி இரண்டு 
வார்த்தை சொல்லி... அடேங்கப்பா... 
என்னைப் போன்றவர்கள் பிரபலங்களிடமிருந்து   கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றன.

http://puthiyamaadhavi.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com