வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்!

குறுந்தகவல் பரிமாற்ற சேவையுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப், அசூர வேக தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று புகைப்படங்கள், வீடியோக்கள் என பலவகையிலான தகவல்களைப் பகிரும்
வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்!

குறுந்தகவல் பரிமாற்ற சேவையுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப், அசூர வேக தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று புகைப்படங்கள், வீடியோக்கள் என பலவகையிலான தகவல்களைப் பகிரும் சமூக வலைத்தளமாக உருவெடுத்துள்ளது.
ஃபேஸ்புக்கில் தங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து லைக்குகளைப் பெறுவதைப்போல், வாட்ஸ் ஆப் குரூப்பிலும் புகைப்படங்களைப் பகிர்ந்து அதுகுறித்து விவாதம் நடத்தும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டிக்கர்கள், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. ஒருவர் தன்னுடைய புகைப் படங்களை எடுத்து அதை பல்வேறு முகபாவங்களை வெளிப்படுத்தும் ஸ்டிக்கராக மாற்றி, பிறருக்கு நிலைமைக்கு ஏற்ப அனுப்புவதுதான் இந்த புதிய சேவையாகும்.
இந்தியாவில் பண்டிகைகளின்போதுதான் வாட்ஸ் ஆப்பில் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ அதிகமாக வாழ்த்துகள் பகிரப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் இந்த வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்களை இளைஞர்கள் அதிகஅளவில் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவையைப் பெற முதலில் ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் 2.18.329 வெர்ஷனுக்கும், ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் 2.18.100 வெர்ஷனுக்கும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்களை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களது புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றி பயன்படுத்த வேண்டும்மென்றால், கூகுள் பிளே ஸ்டோரில் sticker maker for whatsapp என்ற ஆப் - ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகைப்படங்களை வைத்து சுருக்கி, வெட்டி ஸ்டிக்கர்களாக மாற்றலாம். பின்னர் வாட்ஸ் ஆப்பில் அதனைக் கொண்டு வந்துவிடலாம். அதன் பின்னர் ஸ்டிக்கர்களில் மாற்றம் செய்ய இயலாது.
இந்த ஸ்டிக்கர்களை வாட்ஸ் ஆப்பில் நாம் டைப் செய்யும் இடத்தில் இருந்தே எடுத்து சாட்களில் இணைத்து அனுப்பலாம். எனினும், ஸ்டிக்கர்களை உருவாக்கும் ஆப்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் மூன்றாம் நபர்களுக்கு அளித்துள்ளதால், பிளே ஸ்டோரிலும், ஐஓஎஸ்ஸிலும் ஏராளமான ஆப்கள் அதிகரித்து வருகின்றன. ஒரே அம்சத்துடன் ஏராளமான ஆப்கள் ஆப் ஸ்டோரில் வருவதால், ஸ்டிக்கர் ஆப்களை நீக்க ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
அ. சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com