வேலை...வேலை...வேலை...

தமிழக அரசில் வேலை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை, சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை
வேலை...வேலை...வேலை...

தமிழக அரசில் வேலை 
மொத்த காலியிடம்: 02 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: இளநிலை வேதியியலாளர் - 01 
பணி: வேதியியலாளர் - 01 
தகுதி: எம்.எஸ்.சி. வேதியியல் 
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150, தேர்வுக் கட்டணம் ரூ.150. ஏற்கெனவே ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 செலுத்தி இருப்பவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. 
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnpscexams.in
 அல்லது http://www.tnpsc.gov.in/Notifications/
2019_08_Nofifyn_Chemist_Junior_Chemist.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.03.2019 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 12 
பணி: Office Assistants
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnrd.gov.in
 என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை - 15
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.tnrd.gov.in/pdf/OA_advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.03.2019

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை
மொத்த காலியிடங்கள்: 74
பணி: சுருக்கெழுத்தர்
காலியிடங்கள்: 07 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 09
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 06 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: முதுநிலை அமினா
காலியிடங்கள்: 04 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: ரூ.19,500 - 62,000
பணி: இளநிலை அமினா
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.19.000 - 60,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: ரூ.19,500 - 62,000
பணி: பிராசஸ் எழுத்தர்
காலியிடங்கள்: 03 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 03
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: காவலர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு விலக்கு உண்டு
விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் ஆளறிச்சான்றிதழுடன் கலந்துகொள்ள வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
தலைமை நீதிபதி, சிறுவழக்குகள் நீதிமன்றம், உயர்நீதின்ற வளாகம், சென்னை -104 
அனைத்து தகவல் பரிமாற்றங்களும் (தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு விண்ணப்பம் ஏற்ட்டது அல்லது மறுத்தப்பட்டது) போன்ற அனைத்து விவரங்களும் www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளங்களைத் தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்து கொள்ளவும். 
மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற: https://districts.ecourts.gov.in/sites/default/files/Paper%20publication%202019%20final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும. 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசித் தேதி: 08.03.2019

செயில் நிறுவனத்தில் வேலை
பணி: Overman
காலியிடங்கள்: 19
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் DGMS-இல் வழங்கப்படும் Overmanship சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 52
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS-இல் வழங்கப்படும் Mining Sirdar’s சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Surveyor
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mine’s Survey-இல் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் Surveyor’ சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 3 பணிகளுக்கு 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: ராஞ்சி
தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும். 
விண்ணப்பக் கட்டணம்: Mining Sirdar பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.sail.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.03.2019

GAIL (INDIA) LIMITED நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 27
பணி: Executive Trainee (Chemical) 
காலியிடங்கள்: 15
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
பணி: Executive Trainee (Instumentation)
காலியிடங்கள்: 12
தகுதி: பொறியியல் துறையில் Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, Electronics, Electrical & Electronics  பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 13.03.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-ET-2A-2018/DETAILED%20ADVERTISEMENT-ENGLISH.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.03.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com