சொத்து!

தன் கணக்குப்பிள்ளையை அழைத்த மன்னன் கேட்டான் "நமக்கு எவ்வளவு சொத்து இருக்கு'' என்று.
சொத்து!

தன் கணக்குப்பிள்ளையை அழைத்த மன்னன் கேட்டான்
 "நமக்கு எவ்வளவு சொத்து இருக்கு'' என்று.
 அதற்கு "16 தலைமுறைக்கு
 உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா'' என்று பதில் வர.
 "அப்படியானால் என் பதினேழாவது தலைமுறை என்ன ஆகுமோ?...'' என்று கவலைப்படலானான் அந்த மன்னன் .
 அந்தக் கவலையிலேயே நோய்வாய்ப்பட்டான் .'
 இவ்விஷயம் கேள்விப்பட்ட யோகி ஒருவர் அரண்மனைக்கு வந்தார்.
 "உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தகளுடன் கூடிய இளம் விதவையை தேடி கண்டுபிடியுங்கள் .அவள் தினசரி கூலி வேலைக்கு போய் தான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் . அவளுக்கு இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பி வையுங்கள்...'' நான் உங்களுடைய வியாதிக்கு மருந்து தருகிறேன்" என்றார் .
 அவ்வாறே செய்யப்பட , அந்த விதவையோ "எங்களுக்கு மூன்று நாட்களுக்கு உணவு இருக்கிறது. இப்போதைக்கு அது போதும், தேவைப்பட்டால் நாங்களே உணவு தானியங்கள் கேட்கிறோம்'' என்று உணவு தானியங்கள் நிறைந்த வண்டியை திருப்பி அனுப்பி விட்டாள் அந்த ஏழை விதவை .
 இப்போது ,மன்னனிடம் யோகி சொன்னார், ""தினசரி கூலி வேலை செய்து பிழைக்கும் பெண். அதுவும் கணவன் இல்லாத நிலையில் இரண்டு குழந்தைகளோடு ...அந்த பெண்ணுக்கு இருக்கும் உறுதி எங்கே....... பதினேழாவது தலைமுறைக்கு கவலைப்படும் நீங்கள் எங்கே?...'' என்று சொல்ல, வியாதிக்கான மருந்து தன்னிடமே இருப்பதை மன்னன் உணர்ந்தான்.
 ஜோ. ஜெயக்குமார் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com