என் மகளுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா? எப்போது திருமணம் கைகூடும்?- வாசகி, ராஜகீழ்பாக்கம்

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மகர ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் லக்னஅதிபதியாக

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மகர ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் லக்னஅதிபதியாக ஆவதால் செவ்வாய் தோஷம் இல்லை. சுகாதிபதி பத்தாம் வீட்டில் பத்தாமதிபதியுடன் இணைந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவானின் புக்தி நடக்கிறது. ராகுபகவானை குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. இதனால் ராகுபகவானின் தசையில் அனைத்து யோக பாக்கியங்களும் கூடும். அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருந்தாலும் தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதால் பிரதிவெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com