உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. அரசுக் கிரகங்கள் உன்னத பலம் பெற்று இருப்பதாலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.