எனக்கு வரப்போகும் சனிமஹாதசை எவ்வாறு இருக்கும்? பலர் கஷ்டங்கள் தரும் என்று கூறுகின்றனர். நாங்கள் குடும்பமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டா? என்னென்ன யோகங்கள் உள்ளன? குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகி, சேலம்

உங்களுக்கு கடக லக்னம். லக்னத்தில் பாக்கியாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதியை சமசப்தமமாகப் பார்வை செய்கிறார்.

உங்களுக்கு கடக லக்னம். லக்னத்தில் பாக்கியாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதியை சமசப்தமமாகப் பார்வை செய்கிறார். இதனால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் இருந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்போது குருமஹாதசை முடியும் தருவாயில் உள்ளது. ஏழரை நாட்டுச் சனியும் பொங்கு சனியாக நடக்கும். 
உங்கள் கணவருக்கு துலா லக்னம், மீன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. உங்கள் குழந்தைகள் இருவருக்கும் கன்னி, மிதுன லக்னங்களாக அமைந்து சனிமஹா தசை நடப்பதும் சிறப்பு. அதனால் குடும்பமாக வெளிநாடு சென்று வசிக்க விசா கிடைத்துவிடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com