எனக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா? என் முதல் தங்கைக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? இரண்டாம் தங்கைக்கு எப்போது திருமணமாகும்? எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?- ஸ்ரீதர், திருச்சுழி

உங்களுக்கு மிதுன லக்னம், உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி. லக்னத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் லக்னம்

உங்களுக்கு மிதுன லக்னம், உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி. லக்னத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் லக்னம் மற்றும் சுகஸ்தானாதிபதியான புதபகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்ற சூரியபகவானுடனும் கேது பகவானுடனும் இணைந்து இருக்கிறார். பாக்கியாதிபதியான சனிபகவான் ஏழாம் வீட்டில் திக் பலம் பெற்று அமர்ந்து இருக்கிறார். குடும்பாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்ற குருபகவானால் பார்க்கப்படுகிறார். ஆறு மற்றும் லாபாதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று இருக்கிறார். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதால் தனியார் துறையில் நிரந்தர உத்தியோகம் அமையும். படிப்படியான வளர்ச்சி அடைந்து விடுவீர்கள். இளைய சகோதர ஸ்தானத்தில் சூரியபகவான் ஆட்சி பெற்று இருப்பதாலும் சகோதர காரகரான செவ்வாய்பகவான் லக்னாதிபதியின் சாரத்தில் திக்பலம் பெற்று அமர்ந்து இருப்பதால் உடன் பிறந்தோருக்கும் பெற்றோருக்கும் ஆதரவாக இருப்பீர்கள். உங்கள் முதல் தங்கைக்கு இந்த ஆண்டே குழந்தைபாக்கியம் உண்டாகும். 
உங்கள் இரண்டாம் தங்கைக்கு தனுசு லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கியாதிபதியான சூரியபகவானுடன் (தர்மகர்மாதிபதி யோகம்) பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவான் மற்றும் லக்னத்தில் இணைந்திருக்கிறார்கள். இது ஒரு வலுவான சேர்க்கையாகும். அதோடு இவர்களை பாக்கிய ஸ்தானத்திலிருந்து குருபகவான் பார்வை செய்வது சிறப்பு. அவருக்கு தற்சமயம் கேதுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி இந்த ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். கேதுபகவானின் தசை இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com