என் மகனின் ஜாதகத்தில் செவ்வாய், ராகு, கேது தோஷம் உள்ளது என்கிறார்கள். பெண்ணின் லக்னத்திலிருந்து 7,8 ஆம் இடங்களை ஆராய்ந்து பெண் ஜாதகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்கள். திருமண யோகம் எப்போது ஏற்படும்? பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் ஏற்படுமா? எந்த திசையில் பெண் அமையும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், கோவை

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். லக்னத்தில் ராகுபகவான் ஏழில் கேதுபகவான் உள்ளது சர்ப்ப தோஷமாகும்.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். லக்னத்தில் ராகுபகவான் ஏழில் கேதுபகவான் உள்ளது சர்ப்ப தோஷமாகும். செவ்வாய்பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குருபகவானின் இல்லத்தில் இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. அவருக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த வேலை பார்க்கும் பெண் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். 2020 ஆம் ஆண்டுக்குப்பிறகு வேலையில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com